பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா?

சென்னை: கொரோனா ஊரடங்கு நவம்பர் மாதம் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளதால், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பில்லை. அதனால் டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய அரையாண்டுத் தேர்வு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.ஜூன் மாதம் தொடங்க வேண்டிய இந்த கல்வி ஆண்டு தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது, டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வும் நடத்த வேண்டும். ஆனால், மத்திய அரசின் அறிவிப்பால், நவம்பர் மாதம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலைஏற்படும். பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி அரையாண்டுத் தேர்வுகளை நடத்துவதும் சிரமம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்போதைக்கு பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு இல்லை. அரசு அறிவிப்பு வராமல் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்றால், கொரோனா சிகிச்சை மையங்–்களாக செயல்படும் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் சீரமைக்கப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்க முடியும். அதற்போது வட கிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால், அதிக அளவு மழை பெய்தால் கொரோனா மற்றும் நோய் தொற்று மாணவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை. அதனால் அரையாண்டுத் தேர்வும் நடத்த முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: