முதுமலையில் லேண்டானா செடிகள் அகற்றும் பணிகள் மும்முரம்

ஊட்டி: மசினகுடி முதல் முதுமலை வரையில் உள்ள லேண்டானா செடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் அந்நிய தாவரங்களான லேண்டானா, பார்த்தீனியம், செஸ்ட்ரம் உட்பட சில தாவரங்கள் உள்ளன. இவைகள் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வேறு தாவரங்கள் வளர விடுவதில்லை.

வன விலங்குகளுக்கும் எவ்வித பயனும் ஏற்படுவதில்ைல. இந்த தாவரங்களை அகற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மசினகுடியில் இருந்து முதுமலை தெப்பக்காடு பகுதி வரை 7 கி.மீ. தொலைவிற்கு சாலையோரங்களில் உள்ள லேண்டானா செடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: