தாய்ப்பால் மூலம் 99% கொரோனா பரவாது: எழும்பூர் மருத்துவமனை ஆய்வில் தகவல்

சென்னை: தாய்பால் மூலம் 99 சதவீதம் கொரோனா தொற்று பரவாது என்று எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட தயார்மார்கள் குழந்தைகளுக்கு தாய்பால் அளிப்பதன் மூலம் தொற்று பரவுகிறதா என்பது தொடர்பான ஆய்வு கடந்த ஜூன் மாதம் முதல் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. இதன்படி தற்போது வரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 600 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

இதில் ஒருவருக்கு மட்டுமே தாய்ப்பாலில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் விஜயா கூறியதாவது:பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தம், குழந்தையை சுற்றி இருக்கக் கூடிய பணி குடநீர், குழந்தைகளின் நஞ்சு பை, குழந்தையின் சளி மாதிரி மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் தாய்ப்பால் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தாய்மார்களின் தாய்ப்பாலில் தொற்று கண்டறியப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: