ஓமந்தூரார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றில் இருந்து 98% பேர் குணம்

சென்னை: கொரோனா கண்காணிப்பு மையத்தில் 98 சதவீதம் பேர் நுரையீரல் தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி கொரோனாவிற்கு பிந்தைய தொடர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில் உடல் பருமன் பரிசோதனை, மூச்சுதிறனாய்வு, நடைபயிற்சி, சிடி ஸ்கேன், தானியங்கி முதல் ரத்த பரிசோதனை, இயன்முறை பயிற்சி, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படுகிறது. இதன் முடிவில் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 150 பேருக்கு மீண்டும் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில் 98 சதவீதம் பேர் நுரையீரல் தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்தது தெரியவந்துள்ளது.

Related Stories: