மகாபாரதத்தில் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது...!! தமிழ் மொழியும், தமிழ் மன்னர்களும் மிக பழமை வாய்ந்தவர்கள் என்பது உறுதி; ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: மகாபாரதத்தில் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளதாக உயர்நீதிமன்றம் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழ் மன்னர்களும், இலக்கியங்களும் பழமையானவை என்பது மேலும் உறுதியாகிறது. குமரிக்கண்டம் பற்றி தொல்லியல் ஆராய்ச்சி செய்யக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குமரிகண்டம் குறித்து ஆய்வு செய்ய கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “தமிழ் மன்னர்கள், தமிழ் மொழி பற்றி மஹாபாரதத்தில் குறிப்பு உள்ளது என்றும், இதன்மூலம் தமிழ் மொழியும், தமிழ் மன்னர்களும் மிக பழமை வாய்ந்தவர்கள் என உறுதி செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் குமரிகண்டம் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஒரிசா பாலு, நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்று நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: