தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் சால்வியா மலர்கள்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் சீசனை முன்னிட்டு இந்த மலர் செடிகளில் தற்போது பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

தற்போது சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பூங்காவில் பூத்துள்ள பல வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மழையால், டேலியா மற்றும் மேரிகோல்டு மலர்கள் அழுகின. ஆனால், ஒரு சிலர் மலர்கள் மட்டும் பூத்து குலுங்குகின்றன. இவைகள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக, பூங்கா முழுவதிலும் தற்போது சிவப்பு நிறத்தில் சால்வியா மலர்கள் பூத்துள்ளன. சாலையோரங்கள், நடைபாதைகள், குளங்களின் கரைகளில் அதிகளவு இந்த மலர்கள் பூத்துள்ளன. இதனை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: