மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு இன்னும் தயக்கம் ஏன்? ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதா?

மருத்துவ இளங்கலை படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தமிழக சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. உடனே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. 40 நாட்களை கடந்தும் மசோதாவுக்கு இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. சட்ட வல்லுனர்களின் கருத்தை பெற வேண்டியிருக்கிறது எனக் கூறி தாமதம் செய்யப்படுகிறது. கவர்னர் ஒப்புதல் கிடைத்து இது சட்டமானால், தமிழகத்தில் உள்ள 4043 மருத்துவ இடங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் 303 பேருக்கு மருத்துவ படிப்புகளில் சேரும் வாய்ப்புக் கிடைக்கும். கவர்னரின் ஒப்புதல் கிடைக்காமல் இருப்பதால் மருத்துவ கவுன்சலிங் கூட இன்னும் நடத்தப்படாமல் இருக்கிறது. மத்திய பாஜ அரசின் எண்ண ஓட்டத்தின் அடிப்படையில், உள்ஒதுக்கீட்டை ஏற்க தயங்கியே கவர்னர் இதில் தாமதம் செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இப்படி இழுத்தடிப்பது, நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கிடைக்காமல் செய்யும் முயற்சியே என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து நான்கு கோண பார்வை இங்கே.

Related Stories: