போலி ஆப் மூலம் 20 லட்சம் மோசடி: ஐஐடி மாணவன் சிக்கினார்

சென்னை: போலி ஆப் தயாரித்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் தட்கல் டிக்கெட் மோசடி நடைபெற்றதாக ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.  அதன்பேரில், தெற்கு ரயில்வே ஆர்பிஎப் சைபர் கிரைம் ேபாலீசார் விசாரணை நடத்தினர்.அதில், திருப்பூர் மாவட்டம் போதியபாளையத்தில் வசிக்கும்  யுவராஜா என்ற வாலிபர், மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. திருப்பூர் ஆர்பிஎப் புலனாய்வு அதிகாரிகள் உதவியுடன் அவரை பிடித்தனர்.

விசாரணையில், இவர் சூப்பர் தட்கல் மற்றும் சூப்பர் தட்கல் ப்ரோ என்ற 2 மொபைல் ஆப்களை போலியாக உருவாக்கி உள்ளார்.

இதை சுமார் ஒரு லட்சம் பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதன் மூலம் 2016 முதல் ₹20 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவர் அண்ணா பல்கலையில் பி.இ.ஏரோ நாட்டிக்கல், கரக்பூர் ஐஐடியில் எம்.டெக்.ஏரோ ஸ்பேஸ் படித்தவர் என்பதும், வேலை  கிடைக்காததால், போலி ஆப் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Related Stories: