கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: பெண் அதிகாரியை முற்றுகை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு 11 மணிக்கு மேல் வாகனங்களில் வியாபாரிகள் வந்து காய்கறி வாங்கி செல்ல   அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செல்ல ஒருவழிப் பாதை ஒதுக்கப்பட்டுள்ளது. தினசரி 2,500 வாகனங்கள் இந்த ஒருவழிப் பாதைவழியாக  செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்  வந்ததால் அதனை உள்ளே அனுமதிக்க தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள்,அங்கிருந்த சிஎம்டிஏ பெண்  அதிகாரி கல்பனாவை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசா, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மார்க்கெட்டுக்கு  ஒருவழிப் பாதையில் செல்வது சிரமமாக உள்ளது. எனவே, இங்கு 3 வழிப்பாதை அமைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: