பீகார் தேர்தல் முடிவு மதச்சார்பற்ற கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் வரும்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அச்சம், பீதியுடன்  வாழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், மறுபக்கம் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் மக்கள்  நாள்தோறும் போராடி வருகிறார்கள். கொரோனா ஒழிப்பு போர் கடும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி அரசின் தவறான  அணுகுமுறை தான் காரணம். இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய பேரழிவை சந்தித்து வேலையில்லா திண்டாட்டம் பெருகி,  வாழ்வாதாரத்திற்காக மக்கள் தவித்து வருகிறார்கள்.

இதையெல்லாம் மூடி மறைக்கிற வகையில், கொரோனா உயிரிழப்புகளை குறைத்ததின் மூலம் இந்தியா சிறப்பாக செயல்பட்டிருப்பதாகவும்,  பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போகிறார்கள்.

 அதேபோல, 2024ல் நடைபெறவுள்ள  பொதுத்தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ. ஆதரவு பெற்ற நிதீஷ்குமார் ஆட்சி  அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது. மோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்து விட்டது. பீகார் தேர்தல் முடிவுகள் மதச்சார்பற்ற  சமூக நீதி கொள்கையில் ஈடுபாடுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகிற வகையில் வெளிவரப்போகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: