சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 4 ஆயிரம் கோயில்களில் திருப்பணி நடக்கவில்லை

* அரசு அறிவிப்பை கண்டுகொள்ளாத அறநிலையத்துறை

* கொரோனாவை ‘கை காட்டும்’ அதிகாரிகள்

சென்னை: சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த 4 ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள் நடத்தவில்லை. இதற்கு கொரோனா ஊரடங்கை  அதிகாரிகள் காரணம் காட்டுவது பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44,120 கோயில்கள்  உள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அல்லாத கோயில்களில் திருப்பணி  மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, பெரிய கோயில்களின் உபரிநிதி பெற்று அதன்மூலம் நடக்கிறது. இதை தவிர்த்து கும்பாபிஷேகம் நடத்தி 14  ஆண்டுகளுக்கு மேலான கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

கடந்த 2019-20ல் 10 கோடியில் 1000 கிராம சிறிய கோயில்கள், 10 கோடியில் 1000 ஆதிதிராவிடர் பகுதிகோயில்களில் திருப்பணி, இதை தவிர்த்து,  1000 பெரிய கோயில்களில் திருப்பணி, இந்தாண்டில் (2020-21ல்) 50 கோடியில் 55 தொன்மை வாய்ந்த கோயில்கள், 10 கோடியில் 1000 கிராம   கோயில்கள், 10 கோடியில் 1000 ஆதிதிராவிடர்,  பழங்குடியினர் பகுதி கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்தார். இதில், பெரிய கோயில்கள் மற்றும் நூற்றாண்டு பழமையான சிறிய கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள மாவட்ட, மாநில  கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன்படி 200 கோயில்கள் வரை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சிறிய கோயில்களுக்கு நிதி ஒதுக்கவில்லை.   இதனால், அந்த கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளவில்லை.

கடந்ந சில நாட்களுக்கு முன் அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில்  கொரோனாவால்பணிகள் மேற்கொள்ளவில்லை என அதிகாரிகள் கூறினர். ஆனால், கடந்த 2019ல் திருப்பணி அறிவிக்கப்பட்ட கோயில்களில்,  பணிகளை முடித்து கும்பாபிஷேகம் ஏன் நடத்தவில்லை என்பது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது தொடர்பாக கமிஷனர் பிரபாகர்  தகவல் தெரிவிக்காததால் அவரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பவில்லை.

Related Stories: