அடையாறு பணிமனையை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழப்பு: பல்வேறு பணிமனை ஊழியர்களும் பாதிப்பு

சென்னை: அடையாறு பணிமனையை சேர்ந்த 3 ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதைபோல் சென்னையில் பல்வேறு பணிமனைகளில்  பணிபுரியும் ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  அதிகரிக்க தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்களான பேருந்துகள், பயணிகள் ரயில்கள், மின்சார ரயில்கள்  ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 7ம் தேதி முதல் சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடையாறு,  திநகர், பல்லவன் இல்லம் பணிமனை, வடபழனி பணிமனை என 30க்கும் மேற்பட்ட பணிமனைகளில் 2500க்கும் மேற்ப்பட்ட மாநகர பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், ஊழியர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து  வருகின்றன.  

அடையாறு பணிமனை வடபழனி-கேளம்பாக்கம் வழித்தடத்தில் பணிபுரிந்து வந்தவர் ஸ்டாலின் (52). இவருக்கு செப்டம்பர் 25ம் தேதி பணியில் இருந்த  போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டதில் ெகாரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கிண்டிமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். திநகர் பணிமனை திநகர்-திருப்போரூர் வழித்தடத்தில் நடந்துராக பணிபுரிந்து வரும் நல்லதம்பி (50). இவருக்கு சர்க்கரை நோய் போன்ற  பாதிப்பு உள்ள நிலையில் பணிக்கு வந்துள்ளார். அதன்பிறகு பணி முடித்து வீட்டிற்கு சென்ற அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் முரளிமில்லர் (41). இவரும் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இவ்வாறு சென்னையில் பணிபுரிந்து வரும் மாநகர  பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 15க்கும் மேற்பட்டவர்கள் ெகாரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து  ஊழியர்கள் கூறுகையில்: ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  இதனால் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

ெபாதுமக்களுக்கு டிக்கெட் கொடுக்கும் போது அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் மிஷன் மூலம் டிக்ெகட்  கொடுத்து வந்த நிலையில் தற்போது டிக்கெட் கிழித்து கொடுக்க வேண்டியிருப்பதால் அதன் மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது.  நடந்துநர்கள், ஓட்டுநர்கள் என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும் கொரோனா வேகமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: