செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல்: முதல்வர் எடப்பாடி நாட்டினார்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக கட்டவுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக நேற்று அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு வட்டம், வேண்பாக்கத்தில் ₹119.21 கோடியில்  27,062 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 4 தளங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். 11.10 ஏக்கரில் இந்த அலுவலகம், கப்பல் வடிவில் 5 மாடி கொண்டதாக கட்டப்படுகிறது.  

இங்கு, கலெக்டர் அறை, மாவட்ட வருவாய் அலுவலகம், மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகம், உள்பட 60 துறைகள் அமையவுள்ளன. நிகழ்ச்சியில் கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட வருவாய் ஆய்வாளர் பிரியா, எஸ்பி கண்ணன், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: