மருத்துவமனையில் சிகிச்சை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் முதல்வர் நலம் விசாரிப்பு

சென்னை:  தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கடந்த 14ம் தேதி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர், சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 15ம் தேதி அவரது இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என ஆஞ்ஜியோ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் நெஞ்சுவலிக்காக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்தித்து அவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

அங்கிருந்த அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரிடமும் மற்றும் மருத்துவர்களிடமும் அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதேபோன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி வீடியோ கால் மூலம் உடல்நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: