ஆயுதபூஜை தொடர் விடுமுறை 38,000க்கும் மேற்பட்டோர் ரயில், பஸ்களில் பயணம்: தொற்று பரவலால் கூட்டம் குறைந்தது

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி ரயில், பஸ்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மக்கள் பயணம் மேற்கொள்வதை தவிர்த்துள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் கூட்டம் குறைவாக இருந்தது.  ஆயுதபூஜை நாளை (25ம் தேதி) வருகிறது. அதற்கு அடுத்தநாள் விஜயதசமி, முந்தைய நாளான இன்றும் விடுமுறையாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக நேற்று இரவே சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டனர். தெற்கு ரயில்வே 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்குகிறது. நேற்று மாலை முதல் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மக்கள் வந்தனர்.

இதேபோல் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கு குறைவான பயணிகளே வந்தனர். இன்றும், நாளையும் அரசு பஸ்களில் பயணிப்பதற்காக 14,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட ரயில், பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பஸ்களில் பயணித்தனர். நடப்பாண்டில் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து 14,000க்கும் மேற்பட்டோரும், ரயில்களில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ேடாரும் பயணிக்கின்றனர். கொரோனா அச்சம் காரணமாகவே பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: