2019ல் சைபர் குற்றங்களால் ரூ.1.25 லட்சம் கோடி இழப்பு : தேசிய ஒருங்கிணைப்பாளர் தகவல்

புதுடெல்லி: கடந்தாண்டு நடந்த சைபர் குற்றங்களால் நாடு முழுவதும் ரூ. 1.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினென்ட் ஜெனரல் டாக்டர் ராஜேஷ் பந்த் தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் கடந்த 2019ல் நடந்த சைபர் குற்றங்களால் ரூ.1.25 லட்சம் கோடி இழப்ப ஏற்பட்டுள்ளது. நாடு ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி 5ஜி நெட்வொர்க்கை உருவாக்கினால், சைபர் அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும்.

சைபர் குற்றங்களை தடுக்க சில பாதுகாப்பு தயாரிப்பு முறைகளில் புதியதாக சில மாற்றங்களை செய்ய வேண்டும். இந்த முயற்சியில் ஒரு சில இந்திய நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இந்த துறையில் இந்தியாவில் பெரிய வெற்றிடம் உள்ளது. மேலும், சைபர் தாக்குதல்களைச் சரிபார்க்க நம்பகமான உள்நாட்டு தீர்வு மையங்களை உருவாக்க வேண்டும். இணைய பாதுகாப்பிற்காக பிரத்யேக தொழில் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: