மதுரையில் கொரோனாவுக்கு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் பலி: உண்மையை அரசு மறைத்தது ஆர்டிஐ மூலம் அம்பலம்

மதுரை: கொரோனா காலத்தில் மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமானது. நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பியிருந்த கேள்வியில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என வினவி இருந்தார். இதற்கு பதில் அளித்த மதுரை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் 5365 பேரும்,

உசிலம்பட்டி மருத்துவமனையில் 22 பேரும், சோழவந்தானில் 16 பேரும், மேலூர் அரசு மருத்துவமனையில் 16 பேரும், பேரையூரில் 32 பேரும், திருப்பரங்குன்றத்தில் 5 பேரும், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 51 பேரும் என மொத்தம் 5,511 பேர் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதே காலகட்டத்தில் மதுரையில் 245 பேரும், மதுரை மாவட்டத்தில் 436 பேரும், உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய பிரம்மா; உண்மையான கொரோனா இறப்புகளை மறைத்து, தமிழக அரசு தவறான தகவல்களை அளித்துள்ளதாக கூறினார்.

அரசு அளித்துள்ள புள்ளி விவரங்களை பார்க்கும் போது கொரோனா உயிரிழப்புகளை அரசு திட்டமிட்டே குறைத்து சொல்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களை அதிகரித்து காட்ட இத்தகைய முறைகேடுகளில் அரசு ஈடுபட்டு இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: