சென்னை காவல்துறையின் தொன்மையை பறைசாற்றும் விதமாக பழைய காவலர் ஆணையத்தை காவல்துறை அருங்காட்சியகமாக மாற்ற திட்டம்.!!!

சென்னை: சென்னை காவல்துறையின் தொன்மையை பறைசாற்றும் விதமாக பழைய காவலர் ஆணையத்தை காவல்துறை அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் கட்டடம் 178 ஆண்டுகள்  பழைமையானது. 1842-ம் ஆண்டு அருணகிரி முதலியாரின் பண்ணை வீடாக இருந்த இந்த கட்டடம் பின்பு 1856-ம் ஆண்டு  ஆங்கிலேயர்களால் காவல்துறைக்காக பயண்படுத்தப்பட்டது. இந்த கட்டிடத்தில் தான் அருள், செந்தாமரை, வால்டர்,  ஜார்ஜ் என பல ஜாம்பவான்கள் சென்னை காவல் ஆணையராக பணிபுரிந்துள்ளனர்.

பல சிறப்புகளை கொண்ட இந்த கட்டிடத்தை காவல்துறை அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்த தமிழக அரசு இதற்காக 4  கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கட்டடத்தின் பழைமை மாறாமல் இருப்பதோடு தமிழக காவல்துறையின் வரலாற்றை  பறைசாற்றும் விதமாக அமைக்கும் பணியில் சென்னை மாநகர காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. டிஜிபி திரிபாதி  ஆலோசரனயின் பேரில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளது.

காவலர்களின் சிறப்புகளை சொல்லும் விதமாக வரலாற்று ஆவணங்கள், ஆங்கிலேய காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், காலம் வாரியாக காவலர்கள் பயன்படுத்தி சீருடைகள், ஆயுதங்கள், விருதுகள் பல்வேறு படைகளின் சிறப்புகள் என காட்சிப்படுத்தப்படவுள்ளது.  ஏற்கனவே உள்ள மர படிக்கட்டுகள், அப்படியே இருக்கும் எனவும் கடுக்காய் சுண்ணாம்பு கொண்டு பழைய கட்டிடம் கட்டுமான மூலம் கட்டடம் புதுபிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் 3 மாதங்களில் முடிவடையும் என்று தெரிவித்துள்ள உயர்அதிகாரிகள் பணிகள் நிறைவடைந்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருங்காட்சியகத்தை திறந்து வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: