இன்று காவலர் வீர வணக்க நாள்: உயிர்நீத்த காவலர்களுக்கு நினைவு சின்னத்தில் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து அஞ்சலி.!!!

சென்னை: காவலர் வீர வணக்க நாளையொட்டி சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர்அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி (இன்று) காவலர் வீர வணக்க நாளான அனுசரிக்கப்படுகிறது. இதன்படி இன்று, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காவல்துறையினர் கருப்பு பட்டை அணிந்து நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து 144 குண்டுகள் முழங்க உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

காவலர் நினைவு கல்வெட்டு திறப்பு:

இன்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காவலர் நினைவு கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். சென்னையில் காவல் இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 1962 ஆண்டு முதல் தற்போது வரை காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த 151 பேரின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவு கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Related Stories: