ஆர்.கே.பேட்டை அருகே 45 லட்சம் மதிப்பில் தரைப்பால பணிகள்: எம்.எல்.ஏ ஆய்வு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே 45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தரைப்பால பணிகளை பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். ஆர்.கே.பேட்டை ஒன்றியம்  ஜனகராஜகுப்பம் ஊராட்சி தியாகாபுரம் பகுதியில் கால்வாய்க்கு இடையில் நெடுஞ்சாலை துறை சார்பில் 45 லட்சம் மதிப்பீட்டில்  தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆர்.கே.பேட்டையிலிருந்து அம்மையார்குப்பம் வழியாக பாலாபுரம், கதனநகரம், மகன்காளிகாபுரம், ஜனகராஜகுப்பம், தாமனேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எளிதாக சென்று வர முடியும். இதனால், கிராம மக்களின் பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், தரைப்பாலம் அமைக்கும் பணிகளை பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும்,  விரைவில் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் விரைவாக பணிகள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட கவுன்சிலர் ஜெ.பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோவிந்தம்மாள் ஆனந்தன், எ.பி.சந்திரன், கார்த்திகேயன், கல்விக்கரசி சேகர், ஜமுனா குமாரசாமி, செல்வி சந்தோஷ், ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: