தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் வெடித்ததால் பரபரப்பு: நோயாளிகள் ஓட்டம்

தஞ்சை:  தஞ்சையில் உள்ள அரசு ராசாமிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவில் நேற்று மதியம் அறுவை சிகிச்சை பகுதிக்கு செல்லும் ஆக்சிஜன் குழாயில் இருந்து திடீரென பயங்கரமான சத்தம் கேட்டது. அதை கேட்டதும் வார்டில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள், உறவினர்கள் அனைவரும் வெளியில் ஓடினர். இதையடுத்து அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது குழாய் வெடித்து காஸ் வெளியேறி கொண்டிருந்தது. பின்னர் தொழில்நுட்ப அலுவலர்கள் சென்று குழாயை சீரமைத்து காஸ் வெளியேறாமல் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து ராசாமிராசுதார் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் உஷாதேவி கூறுகையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை பகுதிக்கு செல்லும் ஆக்சிஜன் குழாயை மர்மநபர்கள் அழுத்தியதால் குழாய் வெடித்து ஆக்சிஜன் வெளியேறியது. இதையடுத்து உடனடியாக குழாய் சீரமைக்கப்பட்டது என்றார்.

Related Stories: