கொரோனாவுக்கு தமிழக தடுப்பூசி பரிசோதனை: ஐசிஎம்ஆர் அனுமதி

சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்திற்கு ஐசிஎம்ஆர் அனுமதியளித்துள்ளது. கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் பணிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டுபிடித்த கோவேக்சின் உள்ளிட்ட மருந்து பல்வேறு கட்ட சோதனைகளில் வெற்றி பெற்று, தற்பொழுது மனிதர்ளுக்கு செலுத்தும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்பொழுது விலங்குகளிடம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு ஐசிஎம்ஆர் அனுமதியளித்துள்ளது. இதில் எலி, முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகளுக்கு செலுத்தப்படும் இந்த பரிசோதனை விரைவில் துவங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெற்றவுடன் அடுத்தகட்ட சோதனை துவங்கும் என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: