5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு: ஆன்லைன் கவுன்சலிங் தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின்்  கீழ் செயல்படும், சீர்மிகு சட்டப் பள்ளியில் நடத்தப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்காக அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம்5ம் தேதி செப்டம்பர் 4ம் ேததி வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி, 5283 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 4910 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 373 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதியுள்ளவர்களுக்கான ரேங்க் பட்டியல் கடந்த 1ம் தேதிவெளியிடப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட மாணவர்களுக்கான சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் முடிவு செய்திருந்தது. அதன்படி நேற்று ஆன்லைன் கவுன்சலிங் தொடங்கியது.

இதை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு அதற்கான ஆணைகளையும் வழங்கினார்.  கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் சீர் மிகு சட்டப் பள்ளியில் 2055 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, மற்ற சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள 11219 பேரின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்கும். அதற்கான அட்டவணையும் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: