நெல் கொள்முதலில் குளறுபடி: விவசாய சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. அறுவடையாகும் நெல்லை கொள்முதல் நிலையங்களில் தாமதமில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், அப்படி கொள்முதல் நடைபெறவில்லை. ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகளுக்கு குறையாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்று கொள்முதல் நிலையங்களுக்கு அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் 300 முதல் 700 மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்லை சேமித்து வைக்க இடவசதி இல்லை எனக்கூறி விவசாயிககள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்நிலை அரசின் கையாலாகாத பொறுப்பின்மையைக் காட்டுகிறது.

Related Stories: