10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வாங்க கூடிய மக்கள் மீது போலீசார் தடியடி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கொரோனா விதிகளை மீறி ரூ.10 ரூபாய் நாணயத்திற்கு ஓட்டலில் பிரியாணி வாங்க சமூக இடைவெளியின்றி கூட்டம் குவிந்ததது. இதனால் போலீசார் பொதுமக்களை லேசான தடியடி நடத்தி விaரட்டியடித்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் புதிதாக ஒரு ஓட்டல் திறப்பு விழா நேற்று நடந்தது. அப்போது சலுகைக் கட்டணமாக ரூ.10 நாணயம் கொடுத்தால் பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஓட்டல் முன்பு பிரியாணி வாங்க காலையில் இருந்தே ஏராளமானவர்கள் வரிசையில் காத்திருந்தனர். பிரியாணி விற்பனை தொடங்கியதும் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களால், திருச்சுழி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி ஒரே இடத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அதிகம் பேர் மாஸ்க் அணியாமல் கூடினர். இதனால் கூட்டத்தை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

இதற்கிடையே உணவக உரிமையாளரான அருப்புக்கோட்டை பெர்க்கின்ஸ்புரத்தை சேர்ந்த ஜாகிர்உசேன்(29) மீது, கொரோனா நோய் பரப்புதல், தனிமனித இடைவெளியில்லாமல் கூட்டத்தைக் கூட்டுதல், கொரோனா பரவல் தடை சட்டம் பிரிவு 188, 269,270 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: