காவல்துறை சார்பில் குறைதீர் கூட்டம்; காரில் தவறவிட்ட 25 சவரன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது பிரச்சனைகளை தீர்த்து கொள்வதற்காக, காவல்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காவல் நிலையங்களில் பல நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள தங்களது பிரச்சனைகளை தீர்த்து கொள்ளும் வகையில், இந்த முகாம் நடைபெற்றது.  இதில் செங்கல்பட்டு மாவட்ட  உதவி காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில், பொதுமக்களிடமிருந்து 127 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 115 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.  

இந்நிலையில், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ரேவதி என்பவர் நேற்று முன்தினம்  குன்றத்தூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு வாடகை காரில் சென்றார். அப்போது, 25 சவரனை காரில் தவற விட்டார். அவற்றை கார் டிரைவர் நவீன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பத்திரமாக ஒப்படைத்தார். டிரைவர நவீனின் நேர்மையைப் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், குறைதீர் முகாமிற்கு வந்திருந்த ரேவதியிடம் 25 சவரனை  ஒப்படைத்தார். மேலும், அவர், ஒவ்வொரு சனிக்கிழமையும் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், வண்டலூர் ஆகிய இடங்களில் உள்ள டிஸ்பி அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட டிஸ்பிக்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று,   தீர்வு கிடைக்க ஆவன செய்வார்கள். இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என  தெரிவித்தார்.

Related Stories: