கொடைக்கானலில் பரபரப்பு மாஸ்க் அணியாமல் வந்த நடிகை அதிதிக்கு அபராதம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் முகக்கவசம் இல்லாமல் காரில் வந்த  நடிகை அதிதிக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பின் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, வார விடுமுறையில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வரத்துவங்கி உள்ளனர். நேற்று கொடைக்கானல் ஏரிச்சாலையில் சுகாதாரத்துறையினர், நேற்று முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் வசூலித்துக் கொண்டிருந்தனர். அப்போது முகக்கவசம் இல்லாமல் ஒரு காரில், ‘அருவி’ பட கதாநாயகி அதிதி வந்தார். அவரது காரை நிறுத்தி அபராதம் கட்டுமாறு கூறினர். இதையடுத்து மாஸ்க் அணிந்து வெளியே வந்த அதிதி, சுகாதாரத்துறையினருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னை வழக்கறிஞர் என்று அதிதி கூறி உள்ளார். இதன் பின் அவருக்கு மருத்துவத்துறையினர் முகக்கவசம் அணியாததற்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் கூறுகையில், ``சோதனையின்போது ஒரு பெண் முகக்கவசம் இல்லாமல் காரில் வந்தார்.  அவர் நடிகை என்பது எங்களுக்கு தெரியாது.  அவருக்கு அபராதம் விதித்தபோது, ‘‘எந்த சட்டத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கிறீர்கள்’’ என்று கேட்டார். நாங்களும் அதற்குரிய விளக்கம் கொடுத்து சட்ட விதிகளை செல்போனில் ஆய்வு செய்யச் சொன்னோம்.  அவர் அதை ஆய்வு செய்தார். பின்னர் அபராதத்தொகை செலுத்தி விட்டுச் சென்றார்’’ என்றார்.

Related Stories: