தமிழகத்தில் மேலும் 4,295 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.83 லட்சமாக உயர்வு

டிஸ்சார்ஜ்     6.32 லட்சம் பேர்

சிகிச்சையில் 40,192 பேர்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 4,295 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 6,83,486 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 40,192 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று 88,574 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4,295 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1,132 பேர், செங்கல்பட்டு 231, கோவை 389, கடலூர் 113, ஈரோடு 122, காஞ்சிபுரம் 148, நாமக்கல் 131, சேலம் 240, திருவள்ளூர் 218 என தமிழகம் முழுவதும் 4,295 பேருக்கு நேற்று தொற்று உறுதி ெசய்யப்பட்டுள்ளது. இதனால் 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 802 ஆண்கள், 2 லட்சத்து 70 ஆயிரத்து 652 பேர் பெண்கள், 32 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 5,005 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர்.  40 ஆயிரத்து 192 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 57 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் 15 பேர், செங்கல்பட்டு 5, கோவை 6, தருமபுரி 3, வேலூர் 4 என மொத்தம் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,586 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: