உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தாமதத்தை அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்க்கின்றனர்: ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு பரபரப்பு கடிதம்

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் சார்பில், தீபக், தீபா, சசிகலாவின் உறவினர்கள் விவேக், கிருஷ்ண பிரியா உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் திடீரென ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகச்சாமி ஆணையம் சார்பில், அப்போலோ மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அப்போலோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அப்போலோ மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான மனு, நீதிமன்றம் விதித்த தடை ஆணையை நீக்குவதற்கான மனு போன்ற மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை. இதற்கு அரசு உரிய அறிவுரைகளை அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கி வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், வழக்கு விசாரணைகளில் அப்போலோ மருத்துவமனை கூலாக வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்கும் போது அரசு வழக்கறிஞர்கள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு இரண்டு முறை வழக்கை முன்கூட்டியே விசாரிக்க மனு தாக்கல் செய்வதற்கு அரசு வழக்கறிஞர்களுக்கு அரசு அறிவுறுத்துமாறு ஆணையம் அரசுக்கு கடிதம் எழுதியது. அதன் பிறகு செப்டம்பர் 26ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அப்போது வியக்கதக்க வகையில் அப்போலோவின் மனுக்களை தள்ளுபடி செய்வதற்கான மனுவை தாக்கல் செய்வதற்கு பதிலாக, ஆணையத்தின் விசாரணை மீதான தடையை நீக்குவதற்கான மனுவை மட்டுமே அரசு தாக்கல் செய்திருப்பதை அறிய முடிந்தது. இதை தொடர்ந்து அக்டோபர் 12ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் வழக்கை தீபாவளிக்கு பின்பு ஒத்திவைக்குமாறு அப்போலோ வழக்கம் போல நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.

இதற்கு அரசு தரப்பு அப்போலோவின் கோரிக்கைக்கு எந்த ஆட்சபனையும் தெரிவிக்கவில்லை. குறைந்த பட்சம், ஆணையத்தின் தடையை நீக்கும் மனுவையாவது இன்று விசாரிக்கலாம் அல்லது அடுத்து விசாரணைக்கான தேதியாவது குறிப்பிடுமாறு கூட நீதிமன்றத்தை கேட்டிருக்கலாம். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேட்கவில்லை. எனவே, வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர். மேலும், முக்கியத்துவம் இல்லாத வழக்காக விசாரிப்பதற்கான நாளான நவம்பர் 3வது வாரத்தில் விசாரணைக்கு வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகளில் அப்போலோ மருத்துவமனை கூலாக வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்கும் போது அரசு வழக்கறிஞர்கள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

Related Stories: