பீகார் சட்டமன்ற தேர்தல்: அக்.23-ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார் ராகுல் காந்தி

பாட்னா: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். பீகாரில் வரும் 28ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 3 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியும் களம் காணுகின்றன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் காங்கிரஸும் பாஜகவும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தங்களது நட்சத்திர பேச்சாளர்களை பிரச்சாரத்தில் களமிறக்கி வருகின்றன.

காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் நரேந்திர மோடியும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் நடத்த உள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி வரும் 23ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். ஹிசுவா மற்றும் காகல்கானில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாநில காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் செய்து வருகிறது.

Related Stories: