11.09 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.95 கோடி ஆக உயர்வு: 71,400 பேர் கவலைக்கிடம்.!!!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த  வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 95  லட்சத்து 73 ஆயிரத்து 043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 88 லட்சத்து 10 ஆயிரத்து 539 பேர் சிகிச்சை பெற்று  வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்து 400 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 96 லட்சத்துக்கும் 53 ஆயிரத்து 434 பேர்  குணமடைந்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் இதுவரை 11 லட்சத்து 09 ஆயிரத்து 070 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - 8,288,278

இந்தியா - 7,430,635     

பிரேசில் - 5,201,570

ரஷியா - 1,369,313

ஸ்பெயின் - 982,723

அர்ஜெண்டினா - 965,609

கொலம்பியா - 945,354

பெரு - 862,417

மெக்சிகோ - 841,661

பிரான்ஸ் - 834,770     

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 223,644

பிரேசில் - 153,229     

இந்தியா - 113,032     

மெக்சிகோ - 85,704     

இங்கிலாந்து - 43,429     

இத்தாலி - 36,427     

பெரு - 33,648     

ஸ்பெயின் - 33,775

பிரான்ஸ் - 33,303

ஈரான் - 29,870

கொலம்பியா - 28,616

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

இந்தியா - 6,521,634     

அமெரிக்கா - 5,395,401

பிரேசில் - 4,619,560     

ரஷியா - 1,056,582

கொலம்பியா - 837,001

பெரு - 769,077

அர்ஜெண்டினா - 778,501

தென் ஆப்ரிக்கா - 629,260

Related Stories: