எம்டிசி.யின் 1000 பாஸ்: 54,000 பேர் வாங்கினர்

சென்னை: எம்டிசியின் 1,000 பஸ் பாஸை நடப்பு மாதத்தில் பயணிப்பதற்காக 54 ஆயிரம் பேர் வாங்கியுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “எம்டிசி சார்பில் தினந்தோறும் 3,200க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் தினந்தோறும் பயணிப்போரின் வசதிக்காக 1,000 பாஸ் அறிமுகம் செய்யப்பட்டது.  ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இருந்து துவங்கி மூன்றாவது வாரம் வரை பெற்றுக் கொள்ளும் வகையில் 1,000 பஸ்  பாஸ் விநியோகிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாஸ் விற்பனை கடந்த மாதம் முதல் மீண்டும் துவங்கியது. வழக்கம் போல் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.  இதுவரை எம்டிசி பஸ்சில் பயணிக்க 1,000  பஸ் பாஸை  54 ஆயிரம் பேர் வாங்கியுள்ளனர்” என்றார்.

Related Stories: