பொய் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டருக்கு அபராதம்

சென்னை: பிராட்வே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரும், சமூக ஆர்வலருமான சுப்பிரமணி, மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017ம் ஆண்டு முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் குடும்ப தகராறு சம்பந்தமாக புகார் கொடுத்த பெண்ணை, அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சுமதி என்ற பெண் காவலர், புகாரை வாபஸ் பெறும்படி கூறி தாக்கி உள்ளார். இதை அறிந்து நான் நியாயம் கேட்பதற்காக காவல் நிலையம் சென்றேன். அங்கிருந்த பெண் காவலர் சுமதி, சிறப்பு எஸ்ஐ ராமதாஸ், போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோர் என்னை தாக்கினர். இன்ஸ்பெக்டர் கண்ணகி என் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் கண்ணகி உள்பட 4 பேருக்கும் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இதில் 70 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் கண்ணகியிடம் இருந்தும், தலா 10 ஆயிரம் ரூபாயை மற்ற 3 பேரிடமும் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். மேலும், அவர்கள் 4 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: