தனியார் பள்ளியில் படித்த 9000 பேர் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தனர்

* 46 பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் கல்வி

* 9 ஆண்டுகளுக்கு பிறகு சேர்க்கை உயர்வு

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. இதன்படி மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, தமிழ்வழி கல்வியுடன் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்துவது, ஸ்மார்ட் கிளாஸ்’ அமைப்பது உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், 2 லட்சம் குடும்பங்களை நேரில் சந்தித்து, மாநகராட்சி பள்ளியின் உட்கட்டமைப்பு, கல்வி தரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் இடையில் நின்ற மாணவர்களும் கண்டறியப்பட்டு, வீட்டிலேயே மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது.

தனியார் பள்ளிகளில் படித்து வந்த 9,000 மாணவர்கள் இதுவரை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தற்போது, 88 ஆயிரத்து, 84 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பள்ளி துவங்கும்போது 90 ஆயிரத்தை நெருங்கி விடுவோம். சென்னையில் உள்ள 46 மாநகராட்சி பள்ளிகளில் முழுதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கல்வி கற்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 2 பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயில மாநகராட்சி பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிகணினி வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநகராட்சி சார்பில், ‘ஸ்மார்ட் போன்கள்’ வழங்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அனைத்து வீடியோக்களும் யூடிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: