புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சமூக இடைவெளியில்லாமல் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு: புரட்டாசி அமாவாசையையொட்டி  சதுரகிரி கோயிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு குவிந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. நேற்று புரட்டாசி அமாவாசையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், வழக்கத்திற்கு மாறாக காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. பக்தர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என கோயில் நிர்வாகம் சார்பில் பரிசோதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு கிருமிநாசினியை போலீசார் வழங்கினர்.

ஆனால், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூட்டமாக சென்றனர். பலர் முகக்கவசம் அணியாமல் சென்றனர். இதனால் கொரோனா பீதி ஏற்பட்டது. சுந்தரமகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  அங்கு வந்த கலெக்டர் கண்ணனிடம், வனத்துறை கேட் வழியே தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் ேகாரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 300 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: