விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை இயற்றிவிட்டு, சட்டத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்கிற மத்திய அரசின் பொய்யை ஏற்க முடியாது : முத்தரசன்

திருச்சி, - மருத்துவ இடஒதுக்கீடு விவாகரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் என்று முத்தரசன் குற்றச்சாட்டி உள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் அளித்த பேட்டி: இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மத்திய அரசு மருத்துவ படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தர முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக மத்திய அரசு துரோகம் இழைப்பதை காட்டுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நிறைவேற்ற வேண்டும்.

ஜி.எஸ்.டி விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசை ஏமாற்றி உள்ளது. கொடுக்க வேண்டிய மானியத்தை கொடுக்காமல் மாநில அரசை கடன் வாங்க கூறுவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக சட்டங்களை இயற்றிவிட்டு அந்த சட்டத்தால் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்கிற பொய்யை கூறுவதை ஏற்க முடியாது. வரும் 28ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை மண்டல அளவில் தஞ்சை, விழுப்புரம், சேலம், சென்னை ஆகிய இடங்களில் விவசாய சட்டம், தொழிலாளர் விரோத சட்டம் ஆகியவை குறித்து விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநாடு நடத்த உள்ளோம்.அதிமுக ஒன்றாக இருக்க வேண்டுமா, இரண்டாக இருக்க வேண்டுமா?. அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டுமா என்பதை பாஜகதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: