அண்ணா பல்கலைக்கழக விவகாரம் துணைவேந்தர் ஒழுங்கீன நடவடிக்கை விளக்கம் கேட்டுள்ளது தமிழக அரசு: அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:- பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை சிறப்பு அந்தஸ்து பெற வேண்டி பல்கலைக்கழக துணைவேந்தர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து ஆராயப்படும் என அரசு தெரிவித்துள்ளது. எந்த நிலையிலும் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டுக்கு பாதகம் விளைவிக்கும் எந்தச் செயலையும் அரசு ஏற்று கொள்ளாது. சிறப்பு அந்தஸ்து பெற வேண்டியதில் உள்ள ஷரத்துகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் கொண்டு வந்த 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளன. இதற்கு விளக்கம் அளிக்க கோரியபோது விளக்கம் மளிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசை நேரடியாகத் தொடர்புகொண்டு நாங்களே நிதியாதாரம் திரட்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எந்த வகையிலான நிதியாதாரம் என தெரியவில்லை. துணைவேந்தரின் இந்த ஒழுங்கீன நடவடிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: