சுற்றுலா சிறப்பை ஒளிபரப்பும் நிறுவனத்துக்கு 7 நாளில் ரூ.1.50 கோடி அளித்தது எப்படி? சுற்றுலாத்துறையில் சர்ச்சை; விசாரணைக்கு கோரிக்கை

சென்னை:  தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகள் குறித்து வெளிநாடு மற்றும் வெளிமாநில மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெங்களூரு, டில்லி, ஜெயப்பூர், கொச்சின், சென்னை உட்பட 5 சர்வதேச விமான நிலையங்களிலும், கோவா, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, பாட்னா, கயா, புனே, நாக்பூர், கவுகாத்தி, ஜெய்ப்பூர், வதோதரா, மும்பை, அகமதாபாத், உட்பட 12 விமான நிலையங்களில் தமிழக சுற்றுலாதலங்களின் சிறப்புகள் குறித்து வீடியோ காட்சிகள் மூலம் ஒளிபரப்படுகிறது. இதற்காக, சுற்றுலாத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு, 3 மாதங்கள் ஒப்பந்தம் போடப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தற்போது சுற்றுலாத்துறை சார்பில் 17 விமான நிலையங்களில் வீடியோ காட்சிகள் ஒளிபரப்ப 3 மாதங்களுக்கு ரூ.2 கோடி செலவில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 10ம் தேதி முதல் 17 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் வீடியோ காட்சிகள் ஒளிரப்பபட்டு வருவதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 9ம் தேதி வரை தமிழக சுற்றுலாத்துறை சிறப்புகள் குறித்து ஒளிபரப்பப்பட வேண்டும். அதை ஆய்வு செய்து, அதன்பிறகு பில் தொகை செட்டில் செய்ய வேண்டும். ஆனால், டெண்டருக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட ஒரே வாரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் திடீரென ரூ.1.50 கோடி வரை விடுவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: