கனமழை காரணமாக மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

மும்பை: கனமழை காரணமாக மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பை, தானே, பல்கர் உள்ளிட்ட வடக்கு கொங்கன் பகுதிகளுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பையின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புனே மாவட்டத்தில் நிம்காவன் கெட்கி கிராமத்தில் நேற்று கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இதே போன்று இந்தாப்பூர் அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில், 2 பேர் வாகனத்தை கழுவி கொண்டிருந்தனர். அவர்கள், வாகனத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related Stories: