பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சுமார் 2 ஆண்டுகளாகியும் ஒழியவில்லை: வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்கப்படுவதாக புகார்

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பல நகரங்களில் வழக்கம் போல் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது. இதனை தடுக்க வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கிவிட்டதால் கடைவீதிகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொருட்களை வாங்குவோர் பிளாஸ்டிக் பைகளுடன் வீடு திரும்புவதை எப்போதும் பார்க்க முடிகிறது. மறுஸ் சுழற்சி செய்ய முடியாத ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நெருங்கி விட்ட நிலையில் அதன் பயன்பாட்டில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை.

தொடக்கத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் தடை காலப்போக்கில் வீரியம் எழும். இதன் எதிரொலியாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையும் குறையவில்லை. ஆனால் தடை செய்யப்பட பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படவில்லை. அண்டை மாநிலங்களில் இருந்து அவை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்பது பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்கள் உற்பத்தியாளர்களின் புகார் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தாலும் இதற்கான மாற்று பொருள் குறித்து அரசு அறிவிக்காததே தற்போதைய சூழலுக்கு காரணம் என்பது சுற்றுசூழல் ஆர்வலர்களின் குற்றச்சாட்டு ஆகும்.

விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களையும் முழுமையாக ஈடுபடுத்தினால் மட்டுமே பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய முடியும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருள் அவசியம் என்பதை நுகர்வோரும் ஏற்கின்றனர். ஆனால் அனைத்து தரப்பினரும் வாங்கும் வகையில் மாற்று பொருளின் விலை இருக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கை ஆகும். பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தும் முகமை பிளாஸ்டிக் கழுவுகளை கையாள்வதற்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்க தவறிவிட்டதே இதற்கு காரணம் என்பது நிபுணர்களின் புகார் ஆகும்.

அரசு தடை விதித்துள்ள போதிலும் மாநிலம் முழுவதும் சேரும் குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை காணலாம் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.  உதாரணமாக சென்னை மாநகரில் சேரும் குப்பைகளில் 25% பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன என்று ஆய்வுகள் கூறுவதை அவர்கள் சுட்டுக் காட்டுகின்றனர்.

Related Stories: