அரசு மீன்வள உறுப்பு கல்லூரிகளில் இளநிலை பட்ட படிப்புகளில் சேர கடைசி தேதி அறிவிப்பு

சென்னை: தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் உறுப்புகல்லூரிகளில் இளநிலை மீன்வள அறிவியல், நான்கு இளநிலை தொழில்நுட்பவியல், நான்கு இளநிலை தொழில்சார் படிப்பு மற்றும் ஒரு இளநிலை வணிக நிர்வாகவியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை வரும் 26ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்குwww.tnjfu.ac.in என்ற இணையதளத்திலும் 04365 256430, 9442601908 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: