துணைவேந்தர் சூரப்பா மரபை பின்பற்றவேண்டும்: அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்

மதுரை: உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து தொழில்நுட்ப மாநாடு 2020 இணைய வழியில் நேற்று துவங்கியது. வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டை வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் நேற்று மதுரையிலிருந்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை அக். 20ல் தொடங்குவதாக தகவல் வந்துள்ளது. 38 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, ஜனநாயக ரீதியில் மரபு சார்ந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் அனைத்து விஷயங்களும் சர்ச்சையாகிறது. உரிமைகள் பாதிக்காத வண்ணம் வளர்ச்சியை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: