5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி நிறைவேற்றியதா?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி நிறைவேற்றியதா? என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டையை அடுத்துள்ள அறந்தாங்கியை கருப்பையா என்பவர் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில்; அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி செல்லக்கூடிய ஒரு நெடுஞ்சாலையில் தமிழக அரசு புதிதாக ஒரு டாஸ்மாக் கடையை வைக்க முயற்சி செய்கிறது. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த கடையை திறப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த பொதுநல வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது; 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆளுங்கட்சி நிறைவேற்றியதா? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

2016-ம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? 2017, 18,19-ம் ஆண்டுகளில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன? தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன?; அதன் மூலம் வருவாய் எவ்வளவு வருகிறது? என்பது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை நவ.11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories: