வேளாண் சட்டங்கள் மூலம் மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டது: ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: வேளாண் சட்டங்கள் மூலம் மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதுஎன காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து ஜனாதிபதி ஒப்பதல் வழங்கியதால்  மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதில்  டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் வேளாண் சடத்திற்கு எதிராக தீவிர போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வேளாண் சட்டங்கள் மூலம் மோடி அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் டிராக்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் தான் கலந்துகொண்டது தொடர்பான வீடியோவுடன் ராகுல் டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்; வேளாண் சட்டங்கள் மூலம் மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டது; நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்ததை தவிர மோடி அரசு வேறு எதையும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: