மென்பொருளில் குறைபாடு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவுரை

சென்னை: கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் மென்பொருளில் குளறுபடியால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தினகரன் நாளிதழில் கடந்த 12ம் தேதி செய்தி வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஏ.வி.வெங்கடாசலம் அளித்துள்ள விளக்கம்: கோ ஆப்டெக்ஸ் 2019 ஏப்ரல் 1 முதல் விற்பனை நிலையங்களில் விற்பனை பட்டியல்கள் கணினிமயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கணினிமயமாக்கப்பட்ட மென்பொருளில் சில விவரங்களின் விடுபடுதல்கள் ஓரிரு விற்பனை நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, படிப்படியாக அவை சரி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் 2019-20 ஆண்டிற்கான கணக்கை சரிபார்க்கும் போது ஏற்படும் குறைபாடுகளுக்குண்டான இழப்பீட்டினை ஓயாசிஸ் நிறுவனம் ஈடுகட்ட வேண்டும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் விற்பனை நிலைய பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்கும் போது, விற்பனை பட்டியலையும் அது சம்பந்தமான அனைத்து பட்டியல்களையும் சரிபார்க்க வேண்டும்.

Related Stories: