தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விடுவிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டியிருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆக.5 முதல் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பின்னர், இவர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம்  பாய்ந்தது. பின்னர், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மெகபூபா முப்தியும் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவரின் காவலை கடந்த ஆக.1-ம் தேதி மேலும் 3 மாதத்துக்கு ஜம்மு அரசு நீட்டித்தது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் மக்கள் ஜனநாயக கட்சிதலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியை விடுதலை செய்வது குறித்து அரசு மவுனம் காத்துவந்தது. இந்நிலையில் மெகபூபாமுப்தி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் என காஷ்மீர் மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Related Stories: