மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்துவதா?.. பாஜகவில் இணைந்த 2-வது நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய குஷ்பு

சென்னை: மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என நடிகை குஷ்பு கூறியதற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் டெல்லியில் பாஜக தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர்  எல்.முருகன் முன்னிலையில் நடிகை குஷ்பு பாஜவில் இணைந்தார். அவருக்கு பாஜக தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, உறுப்பினர் அட்டையை வழங்கினர். பின்னர் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவையும் அவர்  சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, இன்று தமிழகம் திரும்பிய நடிகை குஷ்புவிற்கு சென்னை விமான நிலையத்தில் மலர்தூவி பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; இருக்கிறவர்களுக்கு மரியாதை இல்லை. வெளியே செல்பவர்களுக்கு மரியாதை இல்லை ஏன்? வெளியே செல்கின்றனர் என்று யோசிக்க திறமை இல்லை என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக குற்றம் சாட்டினார். 6 வருடம் கழிந்தப்பின்தான் நான் நடிகை என்று தெரிந்தது. காங்கிரஸ் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு பாஜக தமிழக தலைமை அலுவலகம் கமலாலயம் சென்றப்பின் பதில் அளிப்பேன். கடந்த 6 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக  கடுமையாக உழைத்தேன். சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்றும் விமர்சனம் செய்தார்.

மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என நடிகை குஷ்பு கூறியதற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பிறக்கும் 69 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளைவளர்ச்சி குறைவாக இருப்பது இயற்கை. அப்படி பிறக்கும் குழந்தைகள் எந்த வகையில் சிறுமை? இயலாமை இயற்கையின் அங்கம் அவ்வளவே? அதனை வைத்து அரசியல் எதிரியை விமர்சிப்பது முறையா? மூளை வளர்ச்சி இல்லாதவர்களை சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. குஷ்பு இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் டிச.3 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories: