×

ப்ரியங்களுடன்

நன்றி குங்குமம் தோழி

இதழ் நெடுக அழகின் ஆராதனை பல்வேறு கோணங்களில் அசத்தி, அழகுக்கு மேலும் அழகூட்டியது. பியூட்டி... ஸ்பெஷல்... அள்ளுதே...!
- மயிலை கோபி, அசோக் நகர்.

பியூட்டி ஸ்பெஷல் கண்டேன். தலை முதல் கால் வரை அழகுக்கு தந்து இருக்கும் டிப்ஸ் பெண்களுக்கு இது வரப்பிரசாதம். ‘வெள்ளத்திற்கு  பிறகு கேரளா’ கட்டுரை கண்டேன்... அவர்கள் பட்ட கஷ்டம் அப்பப்பா... இதுபோன்று நமது எதிரிக்குகூட வரக்கூடாது.
- வண்ணை கணேசன், சென்னை.

கேரளா-வெள்ளத்தினால் பேரழிவை சந்தித்தது. ‘நீராலானது இவ்வுலகு’ அதற்கு மிகப் பொருத்தமாக தகவல்களைத் தந்தது  பாராட்டத்தக்கது. ‘கண்ணுறங்கு மகளே’ 8 மணி நேரம் உறக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்தியது.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

‘அழகை கெடுக்குமோ அமுதம்’ என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் மருத்துவர் எம்.எச்.அபிநயா சொன்ன தகவல்கள் அனைத்தும்  இன்றைய இளைய தலைமுறை தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.

வானவில் சந்தை மகிழ்வுந்து - கார் குறித்த கனகச்சிதமான நுணுக்கமான தகவல்களை பயனுள்ள வகையில் அறிந்துகொள்ள வைத்தது.  செல்லுலாய்ட் பெண்கள் தொடர் காவியம் போற்றும் காரிகைகளின் கவிஞான வரலாற்று நினைவுகளை மாண்புற மனதில் தடம்  பதிக்கிறது.
- கவிதா சரவணன், திருச்சி.

வெள்ளத்திற்குப் பிறகு கேரள மக்களின் இன்னல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருவதை படம்பிடித்துக் காட்டிய கட்டுரை  நிம்மதியைத் தந்தது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

கேரளாவில் கம்பளி விற்கும் விஷ்ணு தன்னிடமிருந்த 50 கம்பளிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது மிகப்பெரிய  மனிதாபிமானம்.
- எம்.செல்லையா, சாத்தூர்.

உயிர்க்கொல்லி நோய் எனக் கூறப்படும் புற்றுநோயிலிருந்து மீண்டு வர பாதிப்பு குறைய பல வழிகள் உள்ளன என்பதைத் தெளிவாகக்  கூறியது ‘புற்று நோய் ஓர் உயிர்க்கொல்லியா?’
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!