அபுதாபி: அபுதாபியில் நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், டெல்லியில் ரகானே, அலேக்ஸ் கேரி சேர்க்கப்பட்டுள்ளனர்.