அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கொரோனா :பத்மநாப சுவாமி கோயில் மூடல்

திருவனந்தபுரம், :அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உலக புகழ்பெற்றது. இதற்கு திரு அனந்த பத்மநாப சுவாமி கோயில் என்ற மற்றொரு பெயரும் உண்டு. நகரில் கோட்டைக்குள் ேகாயில் அமைந்துள்ளது. விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

 இந்நிலையில் பத்மநாப சுவாமி கோயிலில் பெரியநம்பி, அர்ச்சகர் உள்பட 12 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று(9ம் தேதி) முதல் வரும் 15 வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய தற்காலிக தடை விதித்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கிடையே பத்மநாப சுவாமி கோயிலின் தினசரி பூஜைகளை கவனித்துக்கொள்ள, தந்திரி சரணநெல்லூர் சதீசன் நம்பூதிரிபாடு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு இல்லாத, ஆரோக்கியமான ஒருசில ஊழியர்களை கொண்டு, தினசரி பூஜைகளை தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: